‘மின்கம்பத்தில் பழுது பார்த்த நபர்’.. ‘ஏணியில் ஏறி வெட்டி சாய்த்த கும்பல்’.. பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Dec 30, 2019 02:48 PM

மின்கம்பத்தில் ஏறி வேலை செய்துகொண்டிருந்தவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Villupuram man murder near house police inquiry about it

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்கரை பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவர் அப்பகுதியில் தச்சு வேலை செய்து வந்துள்ளார். அப்போது வீட்டில் திடீரென மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் அருகில் இருந்த மின்கம்பத்தில் ஏறி பழுதை சரி செய்துகொண்டு இருந்துள்ளார். அப்போது அரிவாளுடன் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் சங்கரை கீழே இறங்குமாறு கூறியுள்ளனர்.

மின் கம்பத்தின் மேலே நின்றவாறே உதவிக்கு அருகில் இருந்தவர்களை சங்கர் அழைத்துள்ளார். ஆனால் அவர்கள் ஆயுதங்களுடன் இருந்ததால் யாரும் உதவிக்கு வராமல் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஏணியின் மேல் ஏறி சங்கரின் காலில் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த சங்கரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சங்கரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சங்கர் அப்பகுதியில் சிலரிடம் தகராறில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனால் முன்விரோதம் காரணமாக சங்கர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CRIME #MURDER #VILLUPURAM