காதலிக்க ‘மறுத்த’ சிறுமியின் ‘தந்தையிடமே’ வேலைக்குச் சேர்ந்து... ‘திட்டமிட்டு’ இளைஞர் செய்த பயங்கரம்.. ‘நடுங்க’ வைக்கும் சம்பவம்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Dec 27, 2019 01:00 PM

சென்னை அருகே ஒருதலை காதலால் 17 வயது சிறுமியைக் கொடூரமாகக் கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Chengalpattu Andhra Man Killed Girl Near Chennai Over Love Issue

செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பட்டிபுலத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். விருதுநகரைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் கட்டிடத் தொழில் செய்வதற்காக சென்னை வந்தபோது ஆந்திராவைச் சேர்ந்த பெண் ஒருவரைத் திருமணம் செய்துள்ளார். இவர்களுடைய மகள் பிரியா (17). இந்நிலையில் சமீபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த துர்காராவ் என்ற இளைஞர் ஜெயராஜிடம் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.

துர்காராவ் ஆந்திராவில் பள்ளியில் படிக்கும்போது இருந்து ஜெயராமின் மகள் பிரியாவை ஒருதலையாக காதலித்து வந்ததாகவும், அந்த காதலுக்கு பிரியா சம்மதம் தெரிவிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. பின்னரும் பள்ளிக்குச் செல்லும்போதெல்லாம் துர்காராம் பிரியாவிற்கு தொந்தரவு கொடுத்து வந்ததால், அவர் அங்கிருந்து பட்டிபுலம் சென்று பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இதையடுத்தே பிரியாவை எப்படியாவது சம்மதிக்க வைக்கவேண்டுமென திட்டமிட்ட துர்காராம், அவருடைய தந்தை ஜெயராஜிடம் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.

வேலைக்குச் சேர்ந்த பின்னர் தன்னைக் காதலிக்கும்படி மீண்டும் அவர் பிரியாவை தொந்தரவு செய்யத் தொடங்கியுள்ளார். ஆனால் பிரியா தொடர்ந்து மறுத்துவரவே, நேற்று துர்காராம் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரியாவை உடல் முழுவதும் சரமாரியாகக் குத்திவிட்டு தப்பியோடியுள்ளார். பின்னர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து தப்பியோடிய துர்காராமை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #CRIME #MURDER #CHENNAI #CHENGALPATTU #GIRL #ANDHRA #LOVE