‘3-வது திருமணத்துக்கு இடையூறு’.. ‘பாறாங்கல் மூடிய நிலையில் குழந்தை சடலம்’.. காதலருடன் சேர்ந்து தாய் செய்த கொடூரம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Dec 30, 2019 03:48 PM

மூன்றாவது திருமணத்துக்கு இடையூராக இருந்த 2 வயது குழந்தையை தாய் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Vellore mother killed her 2 year old baby for 3rd marriage

வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த கம்மவான்பேட்டை அருகே உள்ள மொட்டைமலை மீது முருகன் கோயில் கட்டப்பட்ட வருகிறது. கோயில் வேலைக்காக மக்கள் மலை மீது ஏறி சென்றுள்ளனர். அப்போது பள்ளத்தில் 2 வயது பெண் குழந்தையின் சடலம் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள், உடனே இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலறிந்து வந்த போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இதனை அடுத்து குழந்தை யாருடையது என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது ஆற்காடு அடுத்த தாழனூரை சேர்ந்த தங்கமணி என்பவர் குழந்தை ஒன்று காணாமல் போயுள்ளதாக தகவல் கொடுத்துள்ளார். மேலும் குழந்தையின் தாய் மஞ்சுளா (23) மீது சந்தேகம் இருப்பதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து மஞ்சுளாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் சில நாட்களுக்கு முன்பு ராஜாமணி என்பவரை மஞ்சுளா மூன்றாவதாக திருமணம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. முதலாவதாக தனது தாய்மாமாவை மஞ்சுளா திருமணம் செய்துள்ளார். பின்னர் மதுரையை சேர்ந்த பாண்டியன் என்பவரை 2-வதாக திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த நிலையில் கணவரை பிரிந்து குழந்தையுடன் தாழனூரில் மஞ்சுளா வசித்து வந்துள்ளார். அப்போது அப்பகுதியை சேர்ந்த ராஜாமணி என்பவருடன் மஞ்சுளாவுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இவர்களது திருமணத்துக்கு குழந்தை இடையூராக இருந்துள்ளது. இதனால் குழந்தையை கொலை செய்ய முடிவெடித்துள்ளனர். இதனை அடுத்து கடந்த 22ம் தேதி குழந்தையை கொலை செய்து கம்மவான்பேட்டை மலையில் வீசி பாறாங்கல் வைத்து மூடியுள்ளனர். அதற்கு அடுத்த நாள் இருவரும் திருமணம் செய்துள்ளனர். இந்நிலையில் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #CRIME #MURDER #KILLED #VELLORE #MOTHER #BABY