‘விட்டுச்சென்ற மனைவி!’.. ‘வெறித்தனமாக கிச்சனுக்குள் ஓடிய கணவர்‘.. புதுவருஷ நாளில் நேர்ந்த விபரீதம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jan 02, 2020 12:54 PM

சென்னையில் புதிய வண்ணாரப்பேட்டையில் வசித்து வந்த தம்பதியர் பாபு (40) மற்றும் தேவி(35). திருமணமாகி சில ஆண்டுகளாகியும், இந்த தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால், இருவருக்குமிடையேயான வாழ்க்கையில் விரிசல் உண்டாகியுள்ளது. அவ்வப்போது இருவரும் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

man chops off his genitals after wife leaves him in new year

ஒரு கட்டத்தில் பாபு தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வர ஆரம்பித்தார். இதனை தேவி கண்டிக்க மேலும் இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் முற்ற ஆரம்பித்தது. இதனால் பாபுவுடன் வாழ முடியாது என்று கூறி விவாகாரத்து கேட்டுள்ள தேவி, கடந்த திங்கள் அன்று தன் அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் புத்தாண்டு கொண்டாடுவதற்காக கணவரின் வீட்டுக்கு நேற்று மாலை வந்துள்ளார். ஆனாலும் குழந்தை பாக்கியமின்மையால் மனமுடைந்து போனதாகக் கூறி, மீண்டும் பாபு குடித்துவிட்டு வந்திருந்ததால் அதிருப்தி அடைந்த தேவி மீண்டும் தன் அம்மாவின் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இதனால் பாபு, வெறித்தனமாக கிச்சனுக்குள் ஓடி, கிச்சனுக்குள் இருந்த காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து, தனது பிறப்புறுப்பை அறுத்துக்கொண்டதை அடுத்து, அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Tags : #CHENNAI #HUSBANDANDWIFE