‘வீட்டுக்குள் தேங்காய் சிறட்டையால் எரிக்கப்பட்ட இன்ஜினீயர்’!.. ‘மரத்தால் வந்த பிரச்சனை’!.. வெளியான பகீர் தகவல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Dec 30, 2019 12:21 PM

கோவையில் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Coimbatore engineer murder case 4 person arrested

கோவை மாவட்டம் குறிச்சி கல்லுக்குழி வீதீயை சேர்ந்தவர் சக்திவேல். சாஃப்ட்வேர் இன்ஜினீயரான இவர் கடந்த 22ம் தேதி வீட்டில் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த சக்திவேல் உறவினர்களுடன் அதிகமாக தொடர்பில் இல்லாமல் இருந்துள்ளார். நெல்லையில் உள்ள தனது சகோதரியுடன் மட்டும் அடிக்கடி பேசி வந்துள்ளார்.

இந்த நிலையில் 4 மாதங்களாக சக்திவேலிடமிருந்து எந்த தகவலும் வராததால், அவரது சகோதரியின் கணவர் கோவையில் உள்ள சக்திவேல் வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டுக்குள் சக்திவேல் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். அப்போது சக்திவேலின் எதிர் வீட்டுக்காரர் ஆனந்த்குமார் அடிக்கடி தகாரில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து ஆனந்த்குமாரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், சக்திவேலின் வீட்டின் அருகே இருந்த மரத்தை ஆனந்த்குமார் வெட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனிடையே குடிபோதையில் வந்த ஆனந்த்குமார் தனது நண்பர்களுடன் சக்திவேலிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது சக்திவேலை கட்டையால் தாக்கிக் கொலை செய்துவிட்டு வீட்டுக்குள்ளேயே மண்ணெண்ணெய் ஊற்றி தேங்காய் சிறட்டையால் எரித்துள்ளனர். இந்நிலையில் ஆனந்த்குமார் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags : #MURDER #CRIME #COIMBATORE #ENGINEER #ARRESTED