'பொண்ணு வேலைக்கு போகுதுன்னு நினைச்சோம்'... 'காட்டில் நடந்த பயங்கரம்'... அதிரவைக்கும் தடயங்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Jan 03, 2020 05:21 PM

இளம்பெண் வேலைக்கு செல்வதாக கூறிக்கொண்டு சென்ற நிலையில், காட்டு பகுதியில் காதலனுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Perundurai: Love Couple Found Dead; Evidences Suggest Possible Murder

ஈரோடு வாய்க்கால்மேடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகள் சுகன்யா. இவர் பெருந்துறை சிப்காட்டியில் உள்ள ஒரு தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அதே மில்லில் ஒடிசா மாநிலம் காலாகாந்தி மாவட்டம் சாபல்கன்டா பகுதியை சேர்ந்த ஜாசோபாண்ட் பெகரா என்ற இளைஞரும் வேலை செய்து வந்தார்.

ஒரே மில்லில் இருவரும் வேலை செய்து வந்ததால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனிடையே இருவரது காதல் விவகாரம் சுகன்யாவின் வீட்டிற்கு தெரியவர, அதற்கு சுகன்யாவின் பெற்றோர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார்கள். இந்தநிலையில் கடந்த 30-ந் தேதி மில்லுக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்ற சுகன்யா வீடு திரும்பவில்லை. இதனால் பதறிபோன அவரது பெற்றோர் மில்லில் சென்று விசாரித்தார்கள்.

அப்போது அவர் வேலைக்கு வரவில்லை என்று தெரிந்தது. மேலும் மேலும் சுகன்யாவின் காதலன் ஜாசோபாண்ட் பெகராவும் மாயமாகி இருந்தார். இது மேலும் அவர்களுக்கு சந்தேகத்தை வரவழைத்தது. காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி இருக்கலாம் என எண்ணப்பட்ட நிலையில், பெருந்துறையை அடுத்துள்ள சிப்காட் பகுதியில் பாலிக்காட்டூர் என்ற வன பகுதி உள்ளது. அங்கு ஒரு புதர் மறைவில் மரத்தில் துப்பட்டாவால் தூக்குப்போட்ட நிலையில் சுகன்யாவும், அருகே விஷம் குடித்த நிலையில் ஜாசோபாண்ட் பெகராவும் பிணமாக கிடந்தார்கள்.

இதையடுத்து சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது 2 பேரின் உடல்களின் கண் பகுதியும் அழுகி இருந்ததோடு துர்நாற்றமும் வீசியது. அதனால் அவர்கள் இறந்து 3 நாட்கள் ஆகியிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தார்கள். முதலில் காதலர்கள் இருவரும் தற்கொலை செய்திருக்கலாம் என கருதப்பட்ட நிலையில், அங்கு கிடைத்த தடயங்கள் காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சடலமாக கிடந்த சுகன்யா மற்றும் அவரது காதலன்  ஜாசோபாண்ட் பெகராவின் செல்போன்கள் மயமாகி இருந்தன. மேலும் சுகன்யா அணிந்திருந்த நகைகளும் மயமாகி இருந்தது. இது காவல்துறையினருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனேவ இது கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை முடுக்கி விட்டுள்ளார்கள்.

Tags : #MURDER #KILLED #PERUNDURAI #LOVE COUPLE #EVIDENCES