‘ரெண்டு வாழைப்பழம்’.. ‘2 வாலிபர்கள்’.. ஓட ஓட விரட்டி கடைக்காரருக்கு நடந்த கொடுமை..! மதுரையில் பரபரப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Nov 07, 2019 03:05 PM
வாழைப்பழம் தருவதற்கு தாமதமானதால் கடைக்காரரை தாக்கிய இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
![Madurai two youngsters arrested for attack banana shop owner Madurai two youngsters arrested for attack banana shop owner](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/madurai-two-youngsters-arrested-for-attack-banana-shop-owner.jpg)
மதுரை யாகப்பா நகரை சேர்ந்தவர் மூர்த்தி (58). இவர் கீழப்பெருமாள் மேஸ்திரி தெருவில் வாழைப்பழம் மண்டியும், அருகில் ஒரு பெட்டிகடையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 4ம் தேதி நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் வந்த இரு இளைஞர்கள் இரண்டு வாழைப்பழங்களை மூர்த்தியிடம் கேட்டுள்ளனர். அப்போது கடையில் சில வாடிக்கையாளர்கள் இருந்ததால் மூர்த்தி வாழைப்பழங்களை எடுத்துக்கொடுக்க தாமதமாகியுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் மூர்த்தியை தாக்கியுள்ளனர். இதை எதிர்பார்க்காத மூர்த்தி உடனே கடையைவிட்டு வெளியே வந்துள்ளார். அப்போது அவரை இரு இளைஞர்களும் ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த மூர்த்தி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து இதுகுறித்து மூர்த்தி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் கீரைத்துறையை சேர்ந்த கார்த்திக் (24) மற்றும் கரண் (21) ஆகிய இரு இளைஞர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)