‘அம்மாவை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற மகள்’! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Nov 04, 2019 12:35 PM

மறுமணம் செய்துகொள்ள வற்புறுத்திய அம்மாவை இரும்பு கம்பியால் அடித்து மகள் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Woman arrested for killing mother with an iron rod in Delhi

டெல்லியில் ஹரிநகரைச் சேர்ந்தவர் நீரு பஹா (47). இவர் மின்சார வாரியத்தில் உதவி தனி அதிகாரியாக பணியாற்றி வருகிறார். கணவரை பிரிந்த நீரு பஹா, தனது அம்மா சந்தோஷ் பஹாவுடன் வசித்து வந்துள்ளார். கணவரை பிரிந்து வந்ததற்காக நீரு பஹாவை தனது தாய் சந்தோஷ் பஹா தினமும் திட்டிவந்தாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் நீரு பஹாவை மறுமணம் செய்துகொள்ள தாய் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமையும் இதுகுறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரத்தில் தாய் சந்தோஷ் பஹாவை இரும்பு கம்பியால் நீரு பஹா தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த சந்தோஷ் பஹா ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சந்தோஷ் பஹாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சந்தோஷ் பஹாவை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நீரு பஹாவை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது தாயை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags : #CRIME #WOMAN #KILLED #MOTHER #DELHI #DAUGHTER