'ரயில், பஸ்ல ஆபாசமா எடுத்த போட்டோ '...'தனது வீட்டு பெண்களையும் விடல'...சிக்கிய சென்னை இளைஞர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Nov 05, 2019 10:54 AM

பெண்களை ஆபாசமாக படமெடுத்து, அதனை ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்து வந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் அளித்துள்ள வாக்குமூலம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai guy arrested for uploading illegal photos in the Facebook

ஃபேஸ்புக்கில் பெண்கள் சிலரின் அந்தரங்க போட்டோ மற்றும் வீடியோ பரவலாக பரப்பப்டுவதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது பெரிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கயாஸ் முகமது என்பவருக்கு இதில் தொடர்பு இருப்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர்.

அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் உள்ள நண்பரின் வீட்டில் வசித்து வந்த அவர், ராயப்பேட்டையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்து வந்துள்ளார். முதுகலைப் பட்டதாரியான  கயாஸ் காவல்துறையினரிடம் அதிர்ச்சி வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார். அதில் ''தொடர்ந்து ஆபாச படங்களை பார்த்து வந்ததால் பெண்களின் உடல் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால்  ஆபாசமாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க துவங்கியதாக கூறியுள்ளார்.

வீதிகளில், பேருந்துகளில், ரயில்களில் பெண்கள் செல்லும்போது, அவர்களுக்கு தெரியாமலேயே ஆபாசமாக வீடியோ மற்றும் போட்டோ எடுத்து அதனை ஆபாசமாக சித்தரித்து போலியாக ஃபேஸ்புக் கணக்கு துவங்கி அதில் பதிவேற்றியுள்ளார். அதோடு எந்த புகைப்படம் அதிகமாக பகிரப்படுகிறதோ அதில் ஆபாசமாக கருத்துகளை பதிவேற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார். ஒரு கட்டத்தில் தனது வீட்டு பெண்களையும் தவறாக சித்தரித்து ஃபேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார்.

இந்நிலையில் கயாஸ் முகமது ஆபாச படங்களை ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்வதை அவரது தோழி பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அதனைத்தொடர்ந்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் கயாஸ் முகமது காவல்துறையிடம் சிக்கியுள்ளார். பெண்களின் மீதான மோகம் முற்றி தனது வீட்டு பெண்களையும் ஆபாசமாக வீடியோ எடுத்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #FACEBOOK #POLICE #TAMILNADUPOLICE #CHENNAI #ILLEGAL PHOTOS #VIDEO