‘மாணவிகளிடம் சில்மிஷம்’.. ‘திட்டிய ஆசிரியர்’.. உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கிய மாணவர்கள்..! பரபரப்பு வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Nov 06, 2019 03:44 PM

மாணவிகளிடம் தவறாக நடந்த மாணவர்களை கண்டித்த ஆசிரியர் சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Teacher was thrashed by students in UttarPradesh

உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ்  நகரின் பல்கரான்பூர் பகுதியில் ஆதர்ஷ் ஜந்தா என்ற பள்ளி உள்ளது. இப்பள்ளியில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு சுகாதர முகாம் நடந்தது. அப்போது சில மாணவர்கள், மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அம்மாணவர்களை ஆசிரியர் ஒருவர் திட்டியுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த மாணவர்கள், ஆசிரியரை சரமாரியாக தாக்கயுள்ளனர். அப்போது மாணவர் ஒருவர் கட்டையால் தாக்கியதில் ஆசிரியர் சுருண்டு கீழே விழுகிறார். ஆனாலும் அந்த கும்பல் ஆசிரியரை கொடூரமாக தாக்கியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #CRIME #COLLEGESTUDENTS #ATTACKED #UTTARPRADESH