திருவள்ளுவர் சிலைக்கு காவித்துண்டு, ருத்ராட்ச மாலை அணிவித்த விவகாரம்..! அர்ஜூன் சம்பத் கைது..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Nov 06, 2019 02:57 PM

திருவள்ளுவர் சிலைக்கு காவித்துண்டு, ருத்ராட்ச மாலை அணிவித்த விவகராத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கைது செய்யப்பட்டுள்ளார்.

Thiruvalluvar statue issue Arjun Sampath arrested

சில தினங்களுக்கு முன்பு தமிழக பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவரின் உடையை காவி நிறத்தில் மாற்றி வெளியிடப்பட்ட புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தஞ்சையில் உள்ள திருவள்ளுவர் சிலை மீது மர்ம நபர்கள் சாணி பூசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று தஞ்சை பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் காவித்துண்டு அணிவித்து, திருநீறு பூசி, ருத்ராட்ச மாலை அணிவித்தார். மேலும் கற்பூரம் ஏற்றி தீபாரதனை காட்டினார். இந்த விவகாரம் தொடர்பாக அர்ஜூன் சம்பத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags : #ARJUNSAMPATH #ARRESTED #THIRUVALLUVAR