'காவலரை' மூர்க்கத்தனமாக தாக்கிய 'வழக்கறிஞர்'...வெளியான அதிர்ச்சி வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Nov 05, 2019 02:28 PM

காவலர் ஒருவரை வழக்கறிஞர் மூர்க்கத்தனமாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Police officer being assaulted by lawyers outside Saket District Court

டெல்லியில் உள்ள டிஸ் ஹஸாரி நீதிமன்றத்தில் கடந்த சனிக்கிழமை வழக்குகளின் விசாரணை நடந்து கொண்டிருந்தபோது போலீசார் குற்றவாளிகளை ஏற்றிவந்த சிறை வாகனத்தின் மீது வக்கீலின் கார் மோதியதால் அந்த வக்கீலுக்கும் போலீசாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அது இறுதியில் கைகலப்பாக மாறியது.

இதனிடையே நீதிமன்ற வாயிலில் வக்கீல்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் வக்கீல்களுக்கும் இடையில் பெரிய அளவில் மோதல் வெடித்தது. அப்போது ஒரு போலீஸ் வாகனம் மற்றும் ஒரு கார் தீயிட்டு எரிக்கப்பட்டது. இதற்கிடையில், இவ்விவகாரத்தில் தாமே முன்வந்து விசாரிக்கவுள்ளதாக டெல்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி டி.என்.பட்டில் தெரிவித்தார்.

இந்த சூழ்நிலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் ஒருவரை வழக்கறிஞர் தாக்கும் வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவலரின் கன்னத்தில் அறைந்து அவரை முதுகில் குத்திய வீடியோ காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Tags : #POLICE #ATTACKED #SAKET DISTRICT COURT #DELHI POLICE #TIS HAZARI COURT #ASSAULTED #NEW DELHI