‘பாலிடெக்னிக் மாணவர் மீது துப்பாக்கி சூடு’!.. தப்பி ஓடிய நண்பர்கள்..! தாம்பரம் அருகே பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Nov 05, 2019 02:47 PM

தாம்பரம் அருகே பாலிடெக்னிக் மாணவர் மீது துப்பாக்கி சூடு நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Tambaram polytechnic student gun Shot

சென்னை தாம்பரம் அடுத்த வண்டலூர் அருகேயுள்ள வேங்கடமங்கலத்தை சேர்ந்த முகேஷ் (19). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிகில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள தனது நண்பர் விஜய் வீட்டுக்கு மற்றொரு நண்பரான உதயாவுடன் சென்றுள்ளார். அப்போது திடீரென வீட்டுக்குள் வெடி சத்தம் கேட்டுள்ளது.

இதனால் அக்கம்பக்கத்தினர் பதறி அடித்துக்கொண்டு வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது முகேஷ் நெற்றில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். மற்ற இரு மாணவர்களும் தப்பி சென்றுள்ளனர். உடனே இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் முகேஷை மீட்டு மருத்துமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : #COLLEGESTUDENT #CRIME #CHENNAI #TAMBARAM #GUNSHOT