'வெடித்த போராட்டம்' .. 'அரசியல்வாதி காதைக் கடித்து துப்பிய இளைஞர்'! பரபரப்பு வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Nov 04, 2019 03:05 PM

ஹாங்காங்கில் நடந்த போராட்டத்தில் அரசியல்வாதி ஒருவரின் காதை கடித்து துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hong Kong politician’s ear bitten off as protesters clash with police

ஹாங்காங்கில் அரசு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் டைகோசிங் என்ற பகுதியில் போராட்டக்காரர்கள் மனித சங்கிலி அமைத்து தங்களை எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அந்த சமயம் கூட்டத்துக்குள் நுழைந்த நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதனை அடுத்து அந்நாட்டின் ஜனநாயக கட்சி ஆதரவாளர் ஆண்ட்ரூ சியூ (Andrew Chiu) என்பவரின் காதைக் கடித்து அந்த நபர் துப்பியுள்ளார். அப்போது அந்த நபரை போராட்டக்காரர்கள் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பலரை கைது செய்துள்ளதாக அந்நாட்டு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். ஹாங்காங் அரசியல்வாதியின் காதை கடித்த நபரின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Tags : #CRIME #HONGKONG #PROTEST