‘மாஞ்சா நூல்’ அறுத்து பெற்றோர் கண்முன்னே விழுந்த குழந்தை..! பதற வைத்த சிசிடிவி வீடியோ..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Nov 04, 2019 04:37 PM

சென்னையில் மாஞ்சா நூல் கழுத்தில் அறுத்து குழந்தை பலியான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

CCTV Video, 3 years old baby dies by manja thread in Chennai

சென்னை கொருக்குப்பேட்டை அருகே கொண்டித்தோப்புப் பகுதியை சேர்ந்தவர் கோபால். இவர் தனது இரண்டு வயது மகன் அபினேஷ்வரனுடன் நேற்று (04.11.2019) மாலை உறனவினர் ஒருவர் வீட்டுக்கு பைக்கில் சென்றுள்ளார். பின்னர் கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் மேம்பாலத்தின் வழியே வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தபோது காற்றில் வந்த மாஞ்சா நூல் எதிர்பாராதவிதமாக அபினேஷ்வரன் கழுத்தில் சிக்கியுள்ளது.

இதனால் குழந்தை நிலைகுழைந்து விழுந்துள்ளது. இதனைப் பார்த்த கோபால் உடனே பைக்கை நிறுத்திவிட்டு குழந்தையைப் பார்த்துள்ளார். அப்போது குழந்தையின் கழுத்தில் ரத்தம் வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதுள்ளார். இதனை அடுத்து உடனடியாக அருகில் உள்ள மருத்துமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்துப்பார்த்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், காற்றாடி பறக்க விட்டது தொடர்பாக கொருக்குப்பேட்டையை சேர்ந்த நாகராஜன் மற்றும் 15 வயது சிறுவனை கைது செய்துள்ளனர். இந்நிலையில் குழந்தையின் கழுத்தில் மாஞ்சா நூல் சிக்கிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Tags : #CRIME #CCTV #CHENNAI #BABY #DIES #MAANJA