'நகைகளுடன் ரயிலில் தப்பிய திருடன்'.. 'அதற்கு முன்பே விமானத்தில் போய் காத்திருந்த போலீஸார்'.. கடைசி நிமிடத்தில் பரபரப்பு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Nov 04, 2019 10:19 AM

பெங்களூரில் உள்ள பசவனகுடி என்கிற பகுதியில், வசித்து வரும் மெஹக் என்பவர், தனது இருப்பிடத்தில் இருந்து சற்று தூரம் தள்ளி துணிக்கடை நடத்தி வந்துள்ளார். 

bengaluru police flied and arrested thief who left in train

பின்னர் தனது வீட்டுப் பணிக்காக நண்பர் ஒருவரின் பரிந்துரையின் பேரில் குஷால் சிங் என்கிற ராஜஸ்தானைச் சேர்ந்த நபரை தீபாவளி அன்று பணிக்கு சேர்த்துள்ளார். அந்த நாளில் தனது கடைக்குச் சென்று பூஜை போட்டுவிட்டு வீட்டுக்கு திரும்பிய மெஹக்குக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 

ஆம், வீட்டில் இருந்த 38 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பொருட்களும் காணவில்லை, வேலைக்கு சேர்ந்த குஷால் சிங்கையும் காணவில்லை. உடனே மெஹக் போலீஸில் அளித்த புகாரின் பேரில், குஷால் சிங்கின் போன் நம்பரை ட்ரேஸ் செய்த போலீஸார், பெங்களூரில் இருந்து ஆஜ்மீருக்கு ரயிலில் பயணம் செய்துகொண்டிருப்பதை கண்டுபிடித்தனர். 

ஆனால் குஷால் சிங் ஆஜ்மீர் ரயில்வே நிலையத்தில் இறங்கியவுடன் அவரை பிடித்துவிட எண்ணிய போலீஸார், குஷாலுக்கு முன்பாகவே, ராஜஸ்தானுக்கு விமானத்தில் சென்று, அங்கிருந்து ஆஜ்மீர் சென்று குஷால் சிங் ஆஜ்மீர் ரயில் நிலையத்தில் காலடி எடுத்துவைக்கும்போது கச்சிதமாகக் காத்திருந்தனர். 

ஆனால் போலீஸாரைப் பார்த்ததும் கடைசி நிமிடத்தில் குஷால் தப்பியோட முயற்சித்தார். ஆனால், போலீஸார் விழிப்போடு எல்லா இடத்திலும் அலெர்ட்டாக ஆட்களை நிறுத்தி வைத்திருந்ததால் குஷால் மாட்டிக்கொண்டுள்ளார். உழைப்பால் முன்னேற வேண்டும் என்று பெங்களூருக்கு முதல்முதலில் வந்த குஷால் சிங்குக்கு இது முதல் திருட்டு என்றும் அவரிடம் இருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். 

Tags : #THIEF #POLICE