அம்மாவை காக்க அப்பாவை கட்டையால் அடித்துக் கொன்ற மகன்..! பரபரப்பு சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Nov 05, 2019 04:30 PM

தாயை அடித்த தந்தையை கட்டையால் அடித்து கொன்ற மகனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Son killed his father for family issue in Theni

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள காமக்காபட்டி கிராமத்தை சேர்ந்தவர் தனபாலன். இவரது மனைவி பஞ்சர்வர்ணம். இந்த தம்பதியருக்கு ஸ்ரீதர் என்ற மகன் உள்ளார். தந்தை தனபாலன் தினமும் குடித்துவிட்டு வந்து தாய் பஞ்சவர்ணத்திடம் சண்டை இடுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவும் குடித்துவிட்டு வந்த தனபாலன், தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். மேலும் பஞ்சவர்ணத்தை கடுமையாக தாக்கியுள்ளார்.

அப்போது அங்கே வந்த ஸ்ரீதர் தந்தையை தடுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த தனபாலன் மகன் ஸ்ரீதரையும் தாக்கியுள்ளார். அதனால் கோபமடைந்த ஸ்ரீதர் தனது தந்தையை தள்ளிவிட்டுள்ளார். இதனை அடுத்து இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது அருகில் இருந்த கட்டையால் தனது தந்தையை தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த தனபாலன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தனபாலனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் ஸ்ரீதரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தகராறின் போது ஸ்ரீதரும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

Tags : #CRIME #MURDER #KILLED #SON #FATHER #THENI