‘சிக்னலில் மயங்கி விழுந்த பாட்டி’!.. ‘ஓடி வந்த ஆட்டோ டிரைவர்’.. ‘சல்யூட்’ போட வைத்த காவலர்..! வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Nov 06, 2019 05:45 PM

கோவையில் சிக்னலில் மயங்கி விழுந்த மூதாட்டியை மீட்டு ஆட்டோவில் அனுப்பி வைத்த காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Coimbatore police head constable saves old woman\'s life

கோவை மாவட்டம் சிங்கநல்லூர் காவல் நிலையத்தில் போக்குவரத்து தலைமை காவலராக பணியாற்றி வருபவர் சண்முகசுந்தரம். இவர் வழக்கம்போல நேற்று சிங்கநல்லூர் சாலையில் போக்குவரத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது உறவினர் ஒருவரின் பைக்கில் மூதாட்டி ஒருவர் வந்துள்ளார். சிக்னலில் அருகே வந்துகொண்டிருந்தபோது திடீரென மூதாட்டி மயங்கி விழுந்துள்ளார். இதனால் பைக் ஓட்டி வந்தவர் நிலை தடுமாறி நின்றுள்ளார்.

இதனைப் பார்த்த போக்குவரத்து தலைமை காவலர் சண்முகசுந்தரம் உடனே மூதாட்டியை தூக்கியுள்ளார். பின்னர் அங்கிருந்த ஆட்டோ டிரைவர் மற்றும் சிலரின் உதவியுடன் ஆட்டோவில் அனுப்பி வைத்துள்ளார். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் மூதாட்டிக்கு உதவி செய்த காவலர் சண்முகசுந்தரத்துக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

News & Video Credits: Vikatan

Tags : #TAMILNADUPOLICE #POLICE #COIMBATORE #WOMAN