'வழிபாட்டுக்கு வந்த 8 வயது சிறுமியிடம்...' 'பாஸ்டர் செய்த காரியத்தினால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்...' போக்சோ சட்டம் பாய்ந்தது...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில், 8 வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல் தந்த பாஸ்டரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர், கடந்த 20 ஆண்டுகளாக வடக்கன்குளத்தில் வசித்துவருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள மாரநாதா தேவாலயத்தில் பாஸ்டராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வழிபாட்டுக்காக தனது பெற்றோருடன் வந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். உடனே இந்த சம்பவத்தை சிறுமி பெற்றோரிடம் தெரிவிக்க அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உடனே பாஸ்டர் செல்வராஜ் மீது போலீசில் புகார் அளித்தனர். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பாஸ்டர் செல்வராஜை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
