‘நிர்வாணமாக காரில் இருந்து வீசப்பட்ட இளம்பெண்’.. சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு நடுரோட்டில் நேர்ந்த கொடூரம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாசிகிச்சைக்காக பெங்களூரு வந்த வெளிநாட்டு இளம்பெண் நிர்வாணமாக காரில் இருந்து தூக்கிவீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு தென் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர், தனது சிறுநீரக கல் சிகிச்சைக்காக கடந்த 16ம் தேதி பெங்களூரு வந்துள்ளார். அதிகாலை 4 மணியளவில் டொட்டபல்லபுரா என்ற இடத்தில் இருந்து டாக்ஸியில் சென்றுள்ளார். அப்போது காருக்குள் இருந்த 3 பேர் அப்பெண்ணிடமிருந்த பணம், நகை மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு ஆடைகளை களைந்து நிர்வாணமாக நடுரோட்டில் தூக்கிவீசி சென்றுள்ளனர்.
அந்த இரவில் ஆடைகளின்றி நிர்வாணமாக நடந்த சென்ற அப்பெண் அருகில் உள்ள ஒரு வீட்டில் உதவி கேட்டுள்ளார். பின்னர் அவர்கள் கொடுத்த ஆடையை அணிந்துகொண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிகிச்சைக்காக பெங்களூரு வந்த வெளிநாட்டு பெண்ணிடம் பணம், நகையை பறித்துக்கொண்டு நிர்வாணமாக நடுரோட்டில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
