'ஜாதி பேர சொல்லி திட்டுனாங்க'... அதனால... 'திண்டுக்கல்லில் பயங்கரம்!'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Jan 17, 2020 05:00 PM

சமூகத்தின் பெயரைச் சொல்லித் திட்டியதால், அரசு ஊழியர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

A man attempts suicide after his manager insults him

திண்டுக்கல் அருகே உள்ள ஆவின் தொழிற்கூடத்தில் ஊழியராக வேலை செய்பவர், ஜஸ்டின் திரவியம். அதே ஆவின் தொழிற்கூடத்தில் மேலாளராக பணிபுரிபவர், தினகர பாண்டியன். சில தினங்களுக்கு முன் திரவியத்திடம், வெண்ணெயை உருக்கி நெய்யாக மாற்றுமாறு தினகர பாண்டியன் கூறியுள்ளார்.

அப்போது, இயந்திரக் கோளாறு காரணாமாக, வெண்ணெய் உருக்குவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால், இயந்திரம் சரி செய்யப்படுவதற்குள், திரவியம் உணவருந்தச் சென்றுள்ளார். அந்த சமயத்தில், அங்கு வந்த தினகர பாண்டியன், திரவியம் பணியில் இல்லாததைக் கண்டு, ஆத்திரத்தில் அவருடைய சமூகத்தின் பெயரைச் சொல்லியும், குடும்பத்தைப் பற்றியும் தரக்குறைவாக திட்டியதாகத் தெரிகிறது.

மனமுடைந்த நிலையில் நேற்று பணிக்கு வந்த திரவியம், ஆவின் தொழில் கூடத்திலேயே விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைக் கண்ட சக பணியாளர்கள், அவரைக் காப்பாற்றி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து, திண்டுக்கல்  போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

Tags : #CASTEISM #POLICE #EMPLOYEE