‘கல்லறையில் சிசிடிவி கேமரா’.. ‘திடீரென காணாமல் போன தாயின் சடலம்’.. வெளியான பகீர் பின்னணி..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Jan 20, 2020 03:44 PM

சீனாவில் புதைக்கப்பட்ட தனது தாயின் சடலத்தை காணவில்லை என மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Man files complaint for missing his mother body from Cemetery

சீனாவில் திருமணமாகாத ஆண் ஒருவர் இறந்துவிட்டால் அவருடன் ஒரு பெண்ணின் சடலத்தை புதைப்பதை ஒரு வழக்கமாக கடைபிடித்து வருகின்றனர். சுமார் 500 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கத்தை அந்நாட்டு மக்கள் பின்பற்றி வருவதாக கூறப்படுகிறது. இதற்கு ‘பிண-மணமகள்’ (Corpse bride) என கூறுகின்றனர். சீனக் குடியரசு உருவான பின் 1949-ல் இருந்து இந்த நடைமுறை தடைவிதிக்கப்பட்டது.

ஆனாலும் சில கிராம மக்கள் இந்த நடைமுறையை மறக்காமல் பின்பற்றி வருகின்றனர். அதில் பிண-மணமகளுக்கு பதிலாக ஒரு பெண் பொம்பை செய்தோ அல்லது படம் வரைந்தோ உடன் வைத்து புதைத்து வந்துள்ளனர். தற்போது கிராமங்களிலும் பணக்காரர்கள் பெருகிவிட்டதால், அவர்கள் உண்மையான பெண் சடலத்தை எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.

இதனால் திருமணமாகதவர் இறந்துவிட்டால் அவருக்கு ஜோடியாக பெண் சடலம் பிடித்து தருவதற்கென்றே பல ஏஜெண்டுகள் உருவெடுத்துள்ளனர். பலரும் முழுநேர வேலையாகவே இதை செய்து வருகின்றனர். வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக கல்லறைகளில் இருந்தும் பெண் சடலங்களை தோண்ட ஆரம்பித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல், மே ஆகிய இரு மாதங்களில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட சடலங்கள் திருடு போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கல்லறைகளில் சிசிடிவி கேமரா வைத்து கண்காணித்து வருகின்றனர். இறந்து பல வருடங்கள் ஆன பெண் சடலங்களை கூட இந்த வியாபாரிகள் விட்டுவைப்பதில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஹாங்டாங் பகுதியை சேர்ந்த குவோ என்பவர் கல்லறையில் தனது தாயின் சடலத்தை காணவில்லை என்றும், டாங்பூ கிராமத்தை சேர்ந்த ஜியாங் தன் பாட்டியின் சடலத்தை காணவில்லை என்றும் போலீஸில் புகார் அளித்துள்ள சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

News Credits: Kungumam Mutharam, Dinakaran

Tags : #POLICE #CHINA #MOTHER #CEMETERY #CORPSEBRIDE