'நேத்து ஸ்கூலுக்கு போன பொண்ணுங்க'... 'பெற்றோர் கதறல்!'... 'போலீஸ் அதிரடி'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Jan 21, 2020 11:10 AM

பத்தாம் வகுப்பு படிக்கும் 4 பள்ளி மாணவிகள் ஒரே நேரத்தில் காணாமல் மாயமாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

four school girls missing from avadi and parents reach cops

ஆவடியில் உள்ள காமராஜர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 10-ம் வகுப்பு பயிலும் 4 மாணவிகள் நேற்று பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளனர். ஆனால், இரவு நேரம் ஆகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், பதற்றம் அடைந்த மாணவிகளின் பெற்றோர்கள், காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, சென்னை மாநகர காவல்துறையினர் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர். மேலும், உயர் எச்சரிக்கை கொடுத்து அனைத்து காவல் நிலையத்திலும் தகவல் கொடுத்துள்ளனர். சென்னையில் உள்ள ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம், பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CRIME #SCHOOL #GIRLS #POLICE