‘ரெண்டு எடத்துல வச்சுருக்கேன்...!’ ‘மிரள’ வைத்த தண்டனைக் கைதி... போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Jan 20, 2020 11:24 AM

புதுச்சேரி மத்திய சிறைச்சாலையில் இருந்து கொண்டே தண்டனைக் கைதி ஒருவர் செல்போன் மூலம் புதுச்சேரி ஆளுநர் மாளிகை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

incident of the bomb threat has shocked the police.

புதுச்சேரி காவல் கட்டுப்பாடு அறைக்கு செல்போன் மூலம் பேசிய மர்ம நபர் புதுச்சேரி ஆளுநர் மாளிகை, புதுச்சேரி ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்து இருப்பதாக பேசி இணைப்பை துண்டித்து விட்டான். இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் மூலம் ஆளுநர் மாளிகை வளாகம் மற்றும் புதுச்சேரி ரயில் நிலையம் மற்றும் ரயில்களிலும் சோதனை செய்தனர். இதனையடுத்து போனில் வந்த மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.

இது குறித்து பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் காவல் கட்டுப்பாடு அறைக்கு வந்த செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது, அது காலாப்பட்டு மத்திய சிறையில் இருந்து பேசி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் மத்திய சிறைக்குள் சென்று விசாரித்த போது, கார் திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் டெல்லியை சேர்ந்த நித்திஷ்குமார் என்பது தெரியவந்தது.

சிறையில் இருந்து கொண்டே ஆளுநர் மாளிகை உள்ளிட்ட இடங்களுக்கு சிறைக்கைதி மிரட்டல் விடுத்த சம்பவம் போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து சிறையில் உள்ள அனைத்து அறைகளையும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது மேலும் சில செல்போன்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகின்றது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காலாப்பேட் போலீசார் சிறையில் இருந்த கைதிக்கு எப்படி செல்போன் கிடைத்தது, மிரட்டல் விடுப்பதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #BOMB #POLICE