'நேருக்கு நேர் மோதி'.. கச்சிகுடாவில் ஏற்பட்ட ரயில் விபத்து .. வெளியான சிசிடிவி காட்சிகள்.. வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Nov 11, 2019 11:00 PM

ஹைதராபாத் அருகே மின்சார ரயிலும், எக்ஸ்பிரஸ் ரயிலும் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன.

Hyderabad Kachiguda train accident CCTV footage leaked

கச்சிகுடா ரயில் நிலையம் அருகே  கோவையில் இருந்து டெல்லி நிஸாமுதீன் செல்வதற்காக நின்றுகொண்டிருந்த கொங்கு எக்ஸ்பிரஸ் ரயில் மீது அதே தண்டவாளத்தில் எதிர்த்திசையில் வந்த புறநகர் மின்சார ரயில் இன்று காலை மோதியதில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

சிக்னல் காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிற சூழலில், ரயில் நிலையம் அருகே நடந்த விபத்து என்பதால், ரயில்கள் மெதுவாக வந்ததாகவும் இல்லையென்றால் இன்னும் அசம்பாவிதங்கள் நடந்திருக்கக் கூடும் என்றும் பல்வேறு தரப்புகளில் இருந்து கூறப்பட்டது.

இந்த நிலையில் கொங்கு எக்ஸ்ப்ரஸ் ரயில் மீது புறநகர் மின்சார ரயில் மோதிய சிசிடிவி காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.

Tags : #TRAINACCIDENT #KACHIGUDA #CCTV