‘தனியாக நடந்த சென்ற பெண்ணிடம் வழிப்பறி செய்த மர்மநபர்கள்..! அதிர்ச்சியை ஏற்படுத்திய சிசிடிவி காட்சி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Selvakumar | Oct 23, 2019 11:34 AM
தனியாக நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணிடம் பைக்கில் வந்த மர்ம நபர்கள் வழிப்பறி செய்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

டெல்லியில் ரோகினி என்ற பகுதியில் பெண் ஒருவர் தனியாக நடந்து சென்றுகொண்டு இருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அந்த பெண்ணிடம் இருந்த பையை வழிப்பறி செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் மர்ம நபர்களை துரத்திக்கொண்டு ஓடியுள்ளார்.
ஆனால் அதற்குள் அவர்கள் இருசக்கர வாகனத்தில் வேகமாக தப்பியுள்ளனர். இந்த சம்பவம் அனைத்தும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனை அடுத்து வழிப்பறி தொடர்பாக காவல் நிலையத்தில் அப்பெண் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
#WATCH Two bike borne men snatched chain from a woman in Delhi's Rohini on 21st October; police investigation underway (Source: CCTV footage) pic.twitter.com/2fQLjWpoAM
— ANI (@ANI) October 23, 2019
