‘எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதிய மின்சார ரயில்’! 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்..! பரபரப்பு சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Selvakumar | Nov 11, 2019 12:50 PM
ஹைதராபாத் அருகே மின்சார ரயிலும், எக்ஸ்பிரஸ் ரயிலும் மோதி விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கோவையில் இருந்து டெல்லி நிஸாமுதீன் செல்லும் கொங்கு எக்ஸ்பிரஸ் ரயில் கச்சிகுடா ரயில் நிலையம் அருகே நின்றுகொண்டிருந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை சுமார் 10 மணியளவில் அதே தண்டவாளத்தில் வந்த புறநகர் மின்சார ரயில் ஒன்று எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதியுள்ளது.
இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர். விரைந்த வந்த மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். ரயில் நிலையம் அருகே என்பதால், மின்சார ரயில் குறைந்த வேகத்தில் வந்துள்ளது. அதனால் பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த விபத்து சிக்னல் கோளாறு காரணமாக நடைபெற்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் அந்த வழித்தடத்தில் செல்லும் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
Hyderabad: Two trains have collided at Kacheguda Railway Station. Rescue operations underway. #Telangana https://t.co/mQ87UDdGa4 pic.twitter.com/Vmkw2iUTsq
— ANI (@ANI) November 11, 2019
