‘நொடியில் நடந்த பயங்கர விபத்தில்’.. ‘ஆற்றில் கவிழ்ந்த கார்’.. ‘5 மாத குழந்தையை தூக்கி வீசிக் காப்பாற்றிய தந்தை’..
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Oct 30, 2019 12:18 AM
விபத்தில் சிக்கி ஆற்றில் கவிழ்ந்த கார் ஒன்றிலிருந்து ஒருவர் தனது 5 மாத குழந்தையைத் தூக்கி வீசி காப்பாற்றியுள்ளார்.

மத்தியப்பிரதேசத்தில் பாலத்தின்மீது சென்றுகொண்டிருந்த கார் ஒன்று எதிரே வந்த ஆட்டோவின் மீது மோதியுள்ளது. இதில் நிலைதடுமாறிய கார் கண் இமைக்கும் நேரத்தில் தவறி அருகே இருந்த ஆற்றுக்குள் விழுந்துள்ளது.
விபத்தில் சிக்கி கவிழ்ந்த காரில் 5 பேர் பயணம் செய்த நிலையில், அதில் ஒருவர் தனது 5 மாத குழந்தையை மீட்டு பாலத்தில் நின்றுகொண்டிருந்தவர்களிடம் வீசியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக குழந்தை பாலத்தின் மீது மோதி மீண்டும் ஆற்றுக்குள் விழுந்துள்ளது. இதையடுத்து உடனடியாக பாலத்தின் மீது நின்றுகொண்டிருந்த ஒருவர் ஆற்றில் குதித்து குழந்தையைக் காப்பாற்றியுள்ளார்.
மேலும் விபத்தில் சிக்கிய காரில் இருந்த மற்றவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு அருகிலிருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
#WATCH Madhya Pradesh: A car carrying 5 people lost its balance, while trying to avoid hitting an autorickshaw, and fell into a river in Orchha town of Niwari district today. All the five occupants of the car were later rescued and sent to a hospital. (Source: CCTV footage) pic.twitter.com/TF8uTDBmWG
— ANI (@ANI) October 28, 2019
