‘லட்சக்கணக்கில் கொள்ளை அடித்துவிட்டு’.. ‘சிசிடிவி ரெக்கார்டர் என நினைத்து’.. ‘கொள்ளையர்கள் செய்த காமெடி’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Nov 11, 2019 03:43 PM

நகைக்கடை ஒன்றில் புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்கள் சிசிடிவி கேமரா ரெக்கார்டர் என நினைத்து டிவி செட் டாப் பாக்ஸை கழட்டிச் சென்றுள்ளனர்.

Delhi Robbers Steal TV Set Top Box Mistaking It For CCTV Recorder

டெல்லி பேகம்பூரில் உள்ள நகைக்கடை ஒன்றில் கடந்த சனிக்கிழமை நகை வாங்குவதுபோல நுழைந்த கொள்ளையர்கள் சிலர் துப்பாக்கியைக் காட்டி கடைக்காரரை மிரட்டி 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கொள்ளையின்போது அந்த கும்பலால் லாக்கரை திறக்க முடியாததால் அதிகளவு நகைகள் காப்பாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது, கொள்ளையர்கள் நகைக்கடையில் இருந்த டிவி செட் டாப் பாக்ஸை சிசிடிவி கேமரா ரெக்கார்டர் என நினைத்து கழற்றிச் சென்றது தெரியவந்துள்ளது. இந்தக் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கேமராவில் பதிவாகியுள்ள வீடியோவை வைத்து கொள்ளையர்களை அடையாளம் கண்டுள்ள போலீஸார் அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Tags : #DELHI #JEWELLERY #SHOP #ROBBERY #CCTV #VIDEO #TV #SETTOPBOX