VIDEO: யாரு 'சாமி' இவன்?.. 'பேம்பர்ஸ்' கூட கழட்டல.. 'சிக்ஸரா' அடிச்சு நொறுக்குறான்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Nov 11, 2019 10:42 PM

தேசிய விளையாட்டு ஹாக்கி என்றாலும் கிரிக்கெட் விளையாட்டுக்கு தான் நாடு முழுவதும் அதிகளவில் ரசிகர்கள் இருக்கின்றனர். கிரிக்கெட் போட்டி என்றால் குடும்பத்துடன் அமர்ந்து வெறித்தனமாக பார்க்கும் ரசிகர்களும் இங்கே அதிகம். அதனால் தான் இங்கு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கிரிக்கெட் செழித்து வளர்ந்து வருகிறது.

kid playing cricket, video goes viral on social media

கிரிக்கெட் மீதான கவர்ச்சி பெரியவர்கள் மட்டுமின்றி சிறுவர்களையும் அதிகம் ஈர்க்கிறது. அந்த வகையில் பேம்பர்ஸ் கூட கழட்டாத சிறுவன் ஒருவன் கையில் கிளவுஸ் போட்டுக்கொண்டு கிரிக்கெட் விளையாடுகிறான். மிக தேர்ந்த வீரர்கள் போல நேர்த்தியாக வரும்  பந்துகள் அனைத்தையும் சிக்சருக்கு பறக்க விடுகிறான்.

பொடியனின் இந்த விளையாட்டை பார்த்தவர்கள் வருங்காலத்தில் விராட் கோலி போல மிகப்பெரிய வீரனாக வருவான் என ஆரூடம் கூறி வருகின்றனர். வாங்க வருங்கால கேப்டன்!

Tags : #CRICKET