'நடந்த உண்மை இதாங்க!'.. சிசிடிவியில் வெளியான தடாலடி சம்பவத்தின் இன்னொரு பக்கம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Oct 17, 2019 11:29 PM
சில சமயம், நாம் காண்பதும் பொருள் கொள்வதும் வேறு வேறாக இருக்கலாம். தர்க்கங்களுக்கு அப்பாற்பட்டு தீர விசாரிப்பதே மெய் என்பது நிதர்சனம்.

அவ்வகையில், தஞ்சை மோரிஸ் கார்னர் பகுதியில் இரண்டு இளைஞர்கள் ஒரு டயர் மற்றும் இருசக்கர வாகனத்துக்கான உபரி/உதிரி பொருட்களை விற்பனை செய்யும் கடைக்கு வருவதும், அதில் ஒருவர் கடைக்குள் சென்று டயரை வாங்கி வருவதும், இன்னொருவர் வண்டியை ஓட்டுவதற்கு தயார் நிலையில் வைத்திருந்ததும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
அதுமட்டுமல்லாமல், டயரை வாங்கிவரும் நபர் உடனடியாக ஓடிச்சென்று இருசக்கர வாகனத்தில் ஏறியதுமே, அவரை இன்னும் 2 பேர் துரத்துகின்றனர். இதனை வைத்து அவர்கள் டயரை பணம் கொடுக்காமல் வாங்கிச் சென்றுவிட்டதாக வீடியோ பரவியது. ஆனால் அந்த கடைக்காரர்களிடம் விசாரித்தபோது, இளைஞர்கள் பணம் கொடுத்துதான் டயரை வாங்கியதாக கடைக்காரர்கள் கூறியுள்ளனர்.
