'பயணிகள் ரயிலை'.. 'பழுதுபார்த்துவிட்டு தண்டவாளத்தைக் கடந்த ஊழியர்'.. 'எக்ஸ்ப்ரஸ் ரயிலால் நேர்ந்த சோகம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Nov 05, 2019 04:07 PM
ஜோலார்ப் பேட்டை அருகே தண்டவாளத்தை கடக்க முயற்சித்த ரயில்வே ஊழியர், எக்ஸ்பிரஸ் ரயிலில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்தார்.
அரக்கோணத்திலிருந்து இருந்து ஜோலார்பேட்டை வழியாக சேலம் போகக் கூடிய பயணிகள் ரயில், கேத்தாண்டபட்டி அருகே வந்துகொண்டிருந்தது. ரயிலின் மேற்புரத்தில் செல்லும் மின்சாரக் கம்பியைத் தொடும் மின்சாரத் தாங்கி கீழே விழுந்து உடைந்ததை அடுத்து, அவ்வழியாக செல்லவிருந்த ரயில்கள் அங்கங்கே நிறுத்தப்பட்டன.
பின்னர் பழுதான ரயில் பழுதுபார்க்கப்பட்டதன் பின்பு ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. ஆனால், ரயிலைப் பழுதுபார்த்த ரயில்வே ஊழியர் கோபிநாத், தன் பணிமுடிந்து நீண்ட நேரம் கழித்து தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.
அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக சென்னையிலிருந்து பெங்களூரு நோக்கி சென்ற லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயிலில் மோதி கோபிநாத் பரிதாபமாக உயிரிழந்தார். ரயிலை பழுதுபார்த்த ஊழியர் உயிரிழந்தது குறித்து ஜோலார்ப் பேட்டை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.