‘அசந்த நேரத்தில்’.. ‘தந்தையின் பைக்கை இயக்கிய சிறுமிக்கு’.. ‘நொடியில் நடந்த பயங்கரம்’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Nov 11, 2019 06:17 PM

இரு சக்கர வாகனத்தில் தந்தையுடன் அமர்ந்திருந்த சிறுமி எதிர்பாராத விதமாக வாகனத்தை இயக்கியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.

VIDEO UP Girl Injured After Crashing Fathers Bike Into Hotel

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தின் சிப்ரி பஸார் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தின் வெளியே தந்தை ஒருவர் தன் மகளுடன் இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்துள்ளார். தந்தை பின்னர் அமர்ந்திருக்க மகளை தனக்கு முன்னால் அமர வைத்திருந்துள்ளார். அப்போது திடீரென சிறுமி விளையாட்டாக வாகனத்தை இயக்கியுள்ளார்.

சிறுமி இயக்கியதில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் அருகிலிருந்த உணவகத்தின் அடுப்பு மற்றும் பாத்திரங்களின்மீது மோதியுள்ளது. இதில் பாத்திரத்தில் இருந்த கொதிக்கும் எண்ணெய் சிறுமியின்மீது கொட்டியுள்ளது.

அதைப்பார்த்து அதிர்ந்துபோன சிறுமியின் தந்தையும், மற்றவர்களும் உடனடியாக சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தின்போது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

 

 

Tags : #UTTARPRADESH #GIRL #FATHER #TWOWHEELER #ACCIDENT #OIL #HOTEL #CCTV #VIDEO