'ரயிலுக்குள் பயணி செய்த காரியம்'.. அடுத்தடுத்து தீப்பிடித்த ரயில் பெட்டிகள்... 65 பேர் பலியான சோகம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Oct 31, 2019 11:30 AM

பாகிஸ்தானின் கராச்சி-ராவல்பிண்டி இடையே சேல் தேஸ்காம் விரைவு ரயில் தீவிபத்துக்குள்ளாகியுள்ளது.

Death toll rises fire broke out in Tezgam express,Pakistan

பாகிஸ்தானின் கராச்சி-ராவல்பிண்டி  இன்று அதிகாலை சென்றுகொண்டிருந்த சேல் தேஸ்காம் விரைவு ரயிலில் பயணி ஒருவர் ரயிலில் கேஸ் அடுப்பு பற்ற வைத்து சமைத்துள்ளார். இதனால் திடீரென தீப்பிடித்து அடுத்தடுத்து 3 ரயில் பெட்டிக்கு தீ பரவியுள்ளது. இதனையடுத்து 65க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.

லியாகத்பூர் பகுதியில் நிகழ்ந்த இந்த திடீர் விபத்தினால் ரயிலில் தீப்பற்றி எரிந்ததை அடுத்து படுகாயமடைந்த பலரும் உடனடியாக மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதலில் 16 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியான நிலையில், பலி எண்ணிக்கை 65-ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : #FIREACCIDENT #TRAINACCIDENT #PAKISTAN #KARACHI #RAWALPINDI #TEZGAM EXPRESS