‘இப்படியெல்லாம் கூட ஏடிஎம்ல திருட முடியுமா?’.. ‘ரூம் போட்டு யோசிப்பாங்க போல’..
முகப்பு > செய்திகள் > உலகம்By Saranya | Oct 16, 2019 12:50 PM
கொள்ளையர்கள் ஏடிஎம் எந்திரத்தை ஜே.சி.பி வாகனம் மூலம் உடைத்து எடுத்துச் செல்லும் வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது.

ஏடிஎம் எந்திரங்களில் ஸ்கிம்மர் கருவியைப் பொருத்தி கொள்ளையடிப்பது ஒரு பக்கம் என்றால், மற்றொரு பக்கம் நேரடியாக எந்திரத்தை உடைத்து கொள்ளை அடிப்பதும் நடக்கிறது. ஏடிஎம் மையங்களில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் 2வது வகை கொள்ளையர்கள் எளிதில் மாட்டிக் கொள்கின்றனர்.
இந்நிலையில் வடக்கு அயர்லாந்து பகுதியின் டன்கிவன் நகரில் கொள்ளையர்கள் ஜே.சி.பி வாகனத்தை வைத்து ஏடிஎம் எந்திரம் ஒன்றை மொத்தமாக உடைத்து எடுத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் சில மாதங்களுக்கு முன் நடந்திருந்தாலும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
Masked thieves rip an ATM out of a building with a construction claw pic.twitter.com/ZQiELN1IgZ
— RT (@RT_com) October 14, 2019
