‘இன்னும் அற்புதமான மனுஷங்க இருக்கத்தான் செய்யறாங்க!’.. ‘குட்டி தங்கையுடன் வந்து’.. ‘வியக்கவைத்த சிறுவன்!’..
முகப்பு > செய்திகள் > கதைகள்By Saranya | Nov 05, 2019 11:49 AM
ஹாலோவீன் திருவிழாவின்போது குழந்தைகளுக்காக வைக்கப்பட்டிருக்கும் சாக்லேட் கப்பில் சாக்லேட் இல்லாததைப் பார்த்த ஒரு சிறுவன் செய்த காரியம் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவில் ஹாலோவீன் திருவிழாவின்போது அனைவரும் வீட்டிற்கு வெளியே குழந்தைகளுக்காக சாக்லேட்டுகள் வைப்பது வழக்கம். விதவிதமாக உடை அணிந்து வந்து குழந்தைகள் அந்த சாக்லேட்டுகளை எடுத்துச் செல்வார்கள்.
அதேபோல இந்த ஆண்டு ஹாலோவீன் அன்று மேரிலாந்து பகுதியில் தன் குட்டி தங்கையுடன் வரும் ஒரு சிறுவன் ஒரு வீட்டின் முன் வைக்கப்பட்டிருந்த கப்பில் சாக்லேட் தீர்ந்துபோய் இருப்பதைப் பார்க்கிறான். பின்னர் உடனடியாக தன் பையில் இருந்து கொஞ்சம் சாக்லேட்டுகளை எடுத்து மற்ற குழந்தைகளுக்காக அந்த கப்பில் வைத்துவிட்டுச் செல்கிறான்.
சிறுவன் செய்த இந்த வியக்க வைக்கும் காரியம் அங்கிருந்த கேமாரவில் பதிவாக, அந்த வீட்டின் உரிமையாளர் அதை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர், “உலகில் இன்னும் அற்புதமான மனிதர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை இது கொடுக்கிறது. என்ன ஒரு சுயநலம் இல்லாத சிறுவன்” என நெகிழ்ந்துள்ளார். ஹாலோவீன் அன்று பகிரப்பட்ட அந்த வீடியோவை பல லட்சம் பேர் பார்த்து சிறுவனின் செயலைப் பாராட்டி வருகின்றனர்.
