‘ஷட்டரை உடைக்க கம்பி’!.. ‘செலக்ட் பண்ணி செல்போன்கள் கொள்ளை’! சென்னை பர்மா பஜாரை அதிர வைத்த சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Nov 08, 2019 05:50 PM

பர்மா பஜாரில் கடையின்  ஷட்டரை உடைத்து செல்போன்களை திருடிய கொள்ளையர்களின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Chennai burma bazaar Cellphone theft caught on CCTV camera

சென்னை பர்மா பஜாரில் இன்று (08.11.2019) அதிகாலை 3.40 மணியளவில் இருவர் பைக்கில் வந்துள்ளனர். மக்கள் நடமாட்டம் இல்லாத சமயத்தில் இருவரில் ஒரு நபர் மட்டும் பைக்கைவிட்டு இறங்குகிறார். பின்னர் கையில் வைத்திருந்த கம்பியால் கடை ஒன்றின் ஷட்டரில் பூட்டிருந்த பூட்டை உடைக்க முயற்சி செய்கிறார். நீண்ட நேரமாக முயன்ற அவர் பூட்டை உடைத்து ஷட்டரை திறந்து கடைக்கு உள்ளே செல்கிறார்.

பின்னர் கடையின் உள்ளே இருந்த மேசை ஒன்றை வெளியே இழுந்து அதில் இருந்த செல்போன்களை கையில் அள்ளுகிறார். பின் அதில் உள்ள ஒரு சில போன்களை தவிர்த்து மற்ற செல்போன்களை பைக்கில் சென்று வைக்கிறார். இதனை அடுத்து பைக்கை ஸ்டார்ட் செய்து தயார் நிலையில் இருந்த மற்றொரு நபருடன் தப்பி சென்றுள்ளனர். இவை அனைத்து கடைக்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags : #CCTV #CHENNAI #THEFT