'பதற்றப்படாதீங்க'...'இந்தாங்க மருத்துவ முத்தம்'...'திருடபோன இடத்துல செஞ்ச சேட்டை'...வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Oct 19, 2019 10:33 AM

திருடபோன இடத்தில் பயத்தில் கத்திய பெண்ணிற்கு திருடன் முத்தம் கொடுத்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Burglar Kisses Woman to Calm Her During Robbery video goes viral

பிரேஸிலில் உள்ள மருந்து கடை ஒன்றில் திடீரென புகுந்த இரு இளைஞர்கள், திடீரென கடை உரிமையாளரை துப்பாக்கி முனையில் மிரட்டி பணம் கேட்டார்கள். அதில் ஒரு திருடன் அங்கிருந்த பணம் மற்றும் பொருட்களை எடுத்து கொண்டிருந்தார். அப்போது அந்த கடையின் உள்ளே பொருட்களை வாங்குவதற்காக பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அதனை கவனித்த மற்றோரு திருடன் அந்த பெண்ணிடம் சென்று உங்களது பணத்தை கொடுங்கள் என கேட்டுள்ளார்.

இதனை சற்றும் எதிர்பாராத அந்த பெண் என்னிடம் பணம் எதுவும் இல்லை என கூறி பயத்தில் கூச்சலிட்டுள்ளார். அப்போது அங்கு வந்த திருடன் 'உங்களது பணம் வேண்டாம் என ஆசுவாசப்படுத்தி தோள்பட்டைகளை தட்டுகிறார். பின் அந்த பெண்ணின் நெற்றியில் முத்தமிட்டு அவரை சமாதானப் படுத்துகிறார். பின்னர் இருவரும் 17 ஆயிரம் மற்றும் மருந்து பொருட்களை அங்கிருந்து கொள்ளையடித்து கொண்டு அங்கிருந்து சென்று விடுகிறார்கள்.

இதுதொடர்பான செய்தி டெய்லி மெயில் பத்திரிகையில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags : #ROBBERY #TWITTER #CCTV #BURGLAR #KISSES #PHARMACY #BRAZIL