இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Mar 04, 2020 05:37 PM

1. பூமியை கண்காணிக்கும், 'ஜிஐ சாட் -1' செயற்கைக்கோளை, 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், 'ஜி.எஸ்.எல்.வி., - எப் 10' ராக்கெட் உதவியுடன், நாளை விண்ணில் ஏவப்பட இருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

important headlines read here for evening March 4

2. நிர்பயா குற்றவாளிகளில் ஒருவனான பவன்குமார் குப்தா, தாக்கல் செய்த கருணை மனுவை குடியரசுத்தலைவர் நிராகரித்தார்.  இதனையடுத்து, குற்றவாளிகள் 4 பேருக்கு இருந்த அனைத்து சட்ட வாய்ப்புகளும் நிறைவடைந்துவிட்டன.

3. டெல்லி வன்முறை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என ராஜ்யசபாவில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நாளை காலை 11 வரை அவையை ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.

4. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தி வருவதால் ஹோலி பண்டிகையில் பங்கேற்கப்போவதில்லை என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பாஜ.க, தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும், ஹோலி கொண்டாட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்துள்ளார்.

5. 10 பொதுத் துறை வங்கிகளை இணைக்கும் முடிவிற்கு பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. 2020-ம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் இது அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

6. சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் பெறாத பள்ளிகளை நம்பி பெற்றோர் ஏமாற வேண்டாம் என சி.பி.எஸ்.இ., செயலாளர் அனுராக் திரிபாதி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் பெறாமல், நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்படுவதாகக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

7. தமிழகத்தில் கடந்த 7 நாட்களாக நீடித்த குடிநீர் ஆலைகளின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.இதன் மூலம் சென்னை உள்பட தமிழகத்தில் கடந்த ஒருவாரமாக குடிநீர் கேன் தண்ணீருக்கு நிலவி வந்த தட்டுப்பாடு பிரச்சினை சரியாகும் எனத்தெரிகிறது.

8. மத்திய பிரதேசத்தில் 8 எம்.எல்.ஏ.,க்களை பாஜ.க. கடத்தியுள்ளதாக காங்கிரஸ், குற்றம் சாட்டியதை அம்மாநில பாஜ.க. தலைவர் வி.டி.சர்மா மறுத்துள்ளார்.பாஜ.க. மீதான குற்றச்சாட்டுகள் மிகவும் துரதிர்ஷ்டவசமானவை. பாஜ.க,வுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை எனத் தெரிவித்தார்.

9. இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். கொரோனாவை எதிர்கொள்ள, தனி வார்டுகள் அமைக்கும்படி டில்லியில் உள்ள மருத்துவமனைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

10. பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகளுக்கு ரிசர்வ் வங்கி விதித்திருந்த தடையை நீக்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், இனி இந்தியாவில் பிட்காயின் வர்த்தகம் செய்யலாம் எனவும், வங்கிகளுக்கு கிரிப்டோ கரன்சி மூலம் பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கலாம் எனவும் கோர்ட் அனுமதித்துள்ளது.

Tags : #GSLV F-10 #NIRBHAYA #DELHI RIOT #CORONA #MODI #J.P. NADDA #CBSE #CANE WATER #BITCOIN