‘வெப்பச்சலனம்’ காரணமாக... ‘9 மாவட்டங்களில்’ மழைக்கு வாய்ப்பு... ‘சென்னை’ வானிலை ஆய்வுமையம் தகவல்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Mar 04, 2020 03:58 PM

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக 9 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

9 Districts In TN To Receive Light Rain IMD Chennai

இதுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வெப்பச்சலனம் காரணமாக கோவை, திண்டுக்கல், நீலகிரி, தேனி, திருப்பூர், மதுரை, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் மற்ற பகுதிகள், புதுவை மற்றும் காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நீடிக்கும்” எனக் கூறப்பட்டுள்ளது.

Tags : #WEATHER #RAIN #IMD #CHENNAI #DISTRICTS #TN