VIDEO: 'சிங்கம் களம் இறங்கிருச்சே!!'...'நம்ம தல தோனிக்கு பெரிய விசில் அடிங்க!'... இணையத்தை தெறிக்கவிடும் ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவிரைவில் தொடங்கவிருக்கும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக தோனி சென்னை வந்தடைந்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கோடைக்கால திருவிழாவான 20 ஓவர் ஐபிஎல் தொடர், இம்மாதம் 29ம் தேதி தொடங்க உள்ளது. ஐபிஎல் அணிகளிலேயே மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள அணிகளான மும்பை இந்தியன்ஸூம், சென்னை சூப்பர் கிங்ஸூம் முதல் போட்டியில் மோதுகின்றன. இதனையொட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பயிற்சிக்காக சென்னை வந்தடைந்துள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப்போட்டிக்குப் பின்னர், எந்த மேட்ச்சிலும் தோனி பங்கேற்கவில்லை. ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்புக்கு மத்தியில், தற்போது தோனி மீண்டும் களம் காணுவதால் ஆனந்தக் களிப்பில் ரசிகர்கள் தத்தளிக்கின்றனர். மேலும், ரசிகர்களின் ஆவலைத் தூண்டும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
Picture courtesy: India.com
Every goose shall bump with First Day First Show feels! Just #StartTheWhistles! #HomeSweetDen 🦁💛 pic.twitter.com/DpQBIqahZe
— Chennai Super Kings (@ChennaiIPL) March 1, 2020
