‘மாதவரம் ரசாயனக் கிடங்கில் பயங்கர தீவிபத்து’.. குபுகுபுவென பரவும் புகைமண்டலம்.. பரபரப்பில் தீயணைப்புத்துறை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Feb 29, 2020 08:50 PM

மாதவரம் ரவுண்டானா அருகே ரசாயண கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் சென்னையை பரபரப்பில் ஆழ்த்தியது.

மாதவரம் தீவிபத்து madhavaram chemical godown fire accident

இங்குள்ள கெமிக்கல் குடோனில் பேரல்கள் வெடித்து சிதறுவதால் தீயானது அருகிலுள்ள பிளாஸ்டிக் குடோன் மற்றும் அலுமினிய குடோன் ஆகியவைகளுக்ககும் பரவியதாகவும், காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் மேலும் தீ பரவ வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது.

எனினும் தீயை அணைக்க மாதவரம், செங்குன்றம், மணலி, அம்பத்தூர், வியாசர்பாடி, கொருக்குபேட்டை  உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் முயற்சி செய்துள்ளதாகவும் தெரிகிறது.  தவிர, 20க்கும் மேற்பட்ட தண்ணீர் டேங்கர் லாரிகள் மற்றும் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் உள்ளதால்

அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.

இதுபற்றி பேசிய தீயணைப்புத் துறை டிஜிபி சைலேந்திர பாபு,  ‘முதற்கட்ட விசாரணையில் இந்த ரசாயனம் விஷத் தன்மை வாய்ந்தது இல்லை, அதே சமயம் கடும் புகையை கிளப்ப கூடியது, இதனால் 100 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளன, தீயணைக்கும் பணி விரைவாக நடந்து வருகிறது, யாரும் அச்சப்பட வேண்டாம்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

Tags : #FIREACCIDENT #CHENNAI #MADHAVARAM