'ஹெலிகாப்டர்' சிக்ஸை பறக்கவிட்ட 'தோனி'... பயிற்சியின் போதே 'பட்டையை' கிளப்பும் 'தல'... 'வைரலாகும் வீடியோ'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Suriyaraj | Mar 04, 2020 12:14 PM

ரசிகர்களால் செல்லமாக தல என அழைக்கப்படும் மகேந்திரசிங் தோனி, 2ம் நாள் பயிற்சியின் போது தனது ஃபேவரைட் ஷாட்டான ஹெலிகாப்டர் ஷாட்டை பறக்க விட்டது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Dhoni hits helicopter six at practice - Fans are excited

இந்திய அணியின் முன்னணி வீரரான மகேந்திர சிங் தோனி வரும் 29ம் தேதி துவங்க உள்ள 13வது ஐபிஎல் சீசனில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கேப்டனாக சென்னை அணிக்காக விளையாட உள்ளார். இந்த போட்டித் தொடருக்கான பயிற்சியை சென்னையில் மேற்கொண்டு வருகிறார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வரும் தல தோனியை பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். பயிற்சியின் போதே அவருக்கு ரசிகர்கள் ஏகோபித்த வரவேற்பை அளித்து வருகின்றனர்.

முதல் நாள் பயிற்சியின் போது அரங்கமே அதிரும் அளவிற்கு தோனி தோனி என்று ரசிகர்கள் முழக்கமிட்டனர். இது தொடர்பான வீடியோ ஒன்றினையும் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. இந்நிலையில் தற்போது 2ம் நாள் பயிற்சியின் போது தோனி ஹெலிகாப்டர் ஷாட் மூலம் சிக்ஸர் அடிக்கும் வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

நீண்ட நாள் கழித்து தோனியின் இந்த ஷாட் ரசிர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.வரும் ஐ.பி.எல். தொடரில் தோனி தனது ரசிர்களுக்கு தனது அதிரடி ஷாட்கள் மூலம் விருந்து படைப்பார் என ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Tags : #MSDHONI #DHONI #CHENNAI #CHEPAUK STADIUM #PRACTICE SESSION #FANS EXCITED #HELICOPTER SHOT