'சார் லீவ் வேணும்'... 'நான் ஆபீஸ் வந்தா'?...'மிரட்ட வருகிறான் 'மெட்ராஸ் ஐ'... இத மட்டும் செய்யாதீங்க !

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Mar 04, 2020 03:18 PM

விழியையும் இமையையும் இணைக்கும் ஜவ்வுப் படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றே இளஞ்சிவப்பு கண் நோய் அல்லது 'மெட்ராஸ் ஐ' என அழைக்கப்படுகிறது.

Madras Eye infection Rise in Chennai, says Doctor

கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் கோடை காலத்தில் ஏற்படும் நோய்களும் தற்போது தலைதூக்க தொடங்கியுள்ளது. அதில் சென்னை மக்களை அதிகம் வாட்டி வதைப்பது மெட்ராஸ் ஐ. கடந்த வாரத்தில் மட்டும் சுமார் 850 பேர் இந்த கண் தொற்று நோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

கண் இமைப்படல அழற்சி என்பது, கண்ணின் வெண்படலத்தில் ஏற்படும் வீக்கமாகும். (வெண்படலம் என்பது கண்ணின் வெண்மைப்பகுதி மீதும் மற்றும் கண் இமையின் உட்புறத்திலும் அமைந்திருக்கிற மிக மெல்லிய தெளிவான திசுவாகும்). எளிதாக பிறருக்கு பரவக்கூடிய இந்த கண் தொற்றானது, குழந்தைகளை எளிதில் தாக்குகிறது. பள்ளியில், விளையாட்டு மைதானங்களில், டியூசன் மையங்களில் மற்றும் அவர்கள் அடிக்கடி சென்று வருகிற பிற இடங்களில் இந்த நோய் தொற்று அவர்களை எளிதில் பாதிக்கிறது.

மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்பட்டால் அதிகமான கண்ணீர், கண் இமைகள் மீது படலப்பூச்சாக மாறுகிற அடர்த்தியான, மஞ்சள் நிறத்திலான வெள்ளைக்கழிவு ஆகியவை வெளிப்படும். கண்ணிலிருந்து பச்சை அல்லது வெள்ளை நிறத்தில் திரவம் சுரக்கும். தொற்றுப்பாதிப்புள்ள நபருக்கு கண்களில் அரிப்பு உணர்வும், எரிச்சல் உணர்வும் ஏற்படலாம். மங்கலான பார்வையும் அல்லது வெளிச்சத்தைப் பார்த்தால் கண் கூசும் உணர்வும் அவர்களுக்கு இருக்கக்கூடும்.

இந்த நோயானது ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் வரை நீடிக்கக் கூடும் மற்றும் அதன் பிறகு தானாகவே பாதிப்பு சரியாகிவிடும். இருப்பினும் மெட்ராஸ் ஐ நமக்கு ஏற்பட்டால் சில விஷயங்களை மட்டும் செய்ய கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். ''அதன்படி பாதிப்பு இருக்கும்போது, உங்களது கண்களை தொடவோ அல்லது தேய்க்கவோ கூடாது. கண் மருத்துவர் ஒருவரின் ஆலோசனை இல்லாமல் எந்தவொரு கண் சொட்டு மருந்து, ஆயின்மெண்ட் போன்ற மருந்துகளை பயன்படுத்தக்கூடாது. 

கண் மேக்-அப் சாதனங்கள், கான்டக்ட் லென்ஸ்கள் ஆகியவற்றை பிறருடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள். பிற தனிநபர்களின் ஆடைகளோடு சேர்த்து உங்களது ஆடைகளை துவைக்கக்கூடாது'' என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இதனிடையே நோய் தொற்று பாதிப்புள்ள நபரோடு நேருக்கு நேர் கண்ணை பார்ப்பதன் காரணமாக மெட்ராஸ் ஐ ஒருவருக்கு ஏற்படுவதில்லை. தொற்று பாதிப்புள்ள நபரை தொட நேர்ந்தால், அதன்பிறகுசோப்பு மற்றும் நீரைக்கொண்டு கைகளை சுத்தம் செய்தாலே போதுமானது.

Tags : #CHENNAI #MADRAS EYE #CONJUNCTIVITIS #INFECTION #DOCTOR