'பெண்கள் விடுதியின் கழிப்பறையில்... கதறி அழுத பச்சிளம் குழந்தை'!... கழிப்பறையில் குழந்தை பிரசவித்த மாணவியால்... உறைந்து நின்ற விடுதி நிர்வாகம்!
முகப்பு > செய்திகள் > இந்தியா18 வயது நிரம்பிய கல்லூரி மாணவி, தனது விடுதியின் கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், தூலே பகுதியில் உள்ள சாவித்ரி பாய் பூலே பெண்கள் விடுதியின் கழிப்பறையில் குழந்தை ஒன்று அழும் சத்தம் கேட்டதுள்ளது. உடனடியாக, அந்த விடுதியின் வார்டன் கழிப்பறைக்குள் சென்று பார்க்கும்போது, பச்சிளம் குழந்தை ஒன்று வாலிக்குள் இருப்பதைக் கண்டறிந்தார். இதைத் தொடர்ந்து, காவல் துறையினருக்கு தகவல் அனுப்பப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, சந்தேகத்திற்குரிய மாணவி ஒருவரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். பின்பு, அந்த குழந்தையின் தாய் அவர் தான் என்பது பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டது. மேலும், குழந்தையும் மாணவியும் சிகிச்சைக்காக தூலே அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
