VIDEO: நைசா ‘ஜெராக்ஸ்’ கடைக்குள் புகுந்த மர்மநபர்.. சிசிடிவி பார்த்து ‘ஷாக்’ ஆன பெண்.. செங்கல்பட்டு அருகே அதிர்ச்சி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Mar 02, 2020 07:49 AM

தாம்பரம் அருகே ஜெராக்ஸ் கடையில் வேலை பார்க்கும் பெண்ணின் செல்போனை திருடிய மர்மநபரின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chennai xerox shop woman cell phone theft near Chengalpattu

சென்னை தாம்பரம் அருகே உள்ள புதுபெருங்களத்தூர் காமராஜர் சாலையில் சரண் என்பவர் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் வேலை முடிந்து இரவு 8 மணியளவில் வீட்டுக்கு கிளம்பியுள்ளார். அப்போது கடையில் வைத்திருந்த தனது செல்போன் காணாமல் போனதைக்கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனை அடுத்து அந்த கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்துள்ளனர். அப்போது மாலை 5.45 மணியளவில் கருப்பு சட்டை அணிந்து வந்த நபர் ஒருவர் கடைக்கு வருகிறார். பெண் ஊழியர் அப்போது கணினியில் மும்முரமாக வேலை செய்துகொண்டு இருந்துள்ளார். அந்த சமயம் ஜெராக்ஸ் மிஷின் அருகே உள்ள டேபிள் மீது இருந்த செல்போனை அந்த மர்மநபர் நைசாக திருடி சென்றார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண், கடை உரிமையாளருடன் காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த சிசிடிவி வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Tags : #ROBBERY #CCTV #SMARTPHONE #CHENNAI #CHENGALPATTU