“அதெப்படி உங்க வீட்டு முருங்க மரம்.. என் வீட்ல வந்து உரசலாம்?”... வீட்டுக்குள் புகுந்த மாமனார்.. மருமகளுக்கு நேர்ந்த சோகம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமணம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செந்தில்குமார் மற்றும் கலைவாணி தம்பதியர்.

இவர்களின் வீட்டுக்கு அருகிலேயே, செந்திலின் சித்தப்பாவான 50 வயது மதிக்கத்தக்க ராமன், தன் வீட்டில் வசித்து வந்துள்ளார். ராமனுக்கும் செந்திலுக்கும் ஏற்கனவே பூர்வீக சொத்து தொடர்பான தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் செந்திலின் வீட்டில் வைக்கப்பட்ட வளர்ந்த முருங்கை மரம், தன் வீட்டில் உரசுவதாகக் கூறி நேற்று மாலை, ராமன் செந்திலின் வீட்டுக்குள் சண்டையிட நுழைந்துள்ளார். அங்கு செந்திலின் மனைவி கலைவாணி மட்டும் இருந்துள்ளார்.
அப்போது கலைவாணியிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்த ராமன், திடீரென கத்தியை எடுத்து கலைவாணியை குத்திக் கொன்றுள்ளார். கத்திக் குத்து வாங்கியவுடன் அலறிய கலைவாணியின் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், கலைவாணியை மருத்துவமனையில் சேர்த்தும், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதனை அடுத்து ராமனின் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
