‘இரவு ஹோட்டலில் சாப்பிட விரும்பிய மனைவி’.. ஒரு காரணத்தை சொல்லி மறுத்த கணவன்.. காலையில் நடந்த சோகம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jan 29, 2020 02:27 PM

கணவர் இரவு உணவுக்கு ஹோட்டலுக்கு சாப்பிட அழைத்துச் செல்ல மறுத்ததால் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nagpur woman commits suicide, Husband refuses for dinner

நாக்பூர் மாடோஷ்ரி நகரில் 22 வயது இளம்பெண் கடந்த திங்கள் கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவரது கணவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில், இரவு உணவு சாப்பிட கணவர் ஹோட்டலுக்கு அழைத்து செல்லாததால் மனைவி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தெரிவித்த காவல் ஆய்வாளர் ஹேமந்த்குமார், ‘அப்பெண் இரவு உணவுக்கு வெளியே சென்று ஹோட்டலில் சாப்பிட விரும்பியுள்ளார். ஆனால் தங்களது 1 வயது குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாததால், ஹோட்டலில் சாப்பிட வெளியே செல்ல வேண்டாம் என கணவர் மறுத்துள்ளார். இதில் விரக்தி அடைந்த அப்பெண் திங்கள் கிழமை காலை கணவர் வேலைக்கு சென்றதும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்’ என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தூக்கில் தொங்கிய பெண்ணுக்கு அருகே அவரது குழந்தை அழுதுகொண்டே இருந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியதாகவும், இதுதொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

Tags : #SUICIDEATTEMPT #WOMAN #DINNER #NAGPUR