“பயப்படாதடா செல்லம்.. நான் இருக்கேன்!”.. “கிணற்றில் விழுந்து நாயை துணிந்து மீட்ட சிங்கப்பெண்”.. வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Feb 02, 2020 11:46 PM

கிணற்றில் தவறி விழுந்த நாய் ஒன்றை துணிச்சலுடன் கிணற்றில் இறங்கி காப்பாற்றி பலரது மனதை நெகிழ வைத்துள்ள பெண்ணொருவரின் வீடியோ வைரலாகி வருகிறது.

Rajani Shetty saves a stray dog felled into well video

மங்களூரில் நாய் ஒன்று ஆழமான கிணறு ஒன்றில் தவறுதலாக விழுந்துள்ளது. படிக்கட்டு இல்லாத அந்த வட்ட கிணற்றில் இருந்து அந்த நாயைக் காப்பாற்ற வேறு வழியில்லாத நிலையில், ராஜனி ஷெட்டி என்கிற பெண் கயிறு ஒன்றை இடுப்பில் கட்டிக் கொண்டு அந்த வட்டக் கிணற்றில் இறங்கியுள்ளார்.

கீழே இறங்கியவர், தண்ணீரில் தத்தளித்த அந்த நாயின் இடுப்பில் கயிறு ஒன்றை முதலில் கட்டினார். அந்த கயிறை கிணற்றுக்கு மேலிருப்பவர்கள் இலகுவாக தூக்கி, அந்த நாயை மீட்டனர். அதன் பின் ராஜனி ஷெட்டி கயிற்றை பிடித்து மேலேறி வந்தார்.

அவருக்கு பலரும் கை கொடுத்து,

கிணற்றில் இருந்து வெளியேற உதவினர். செல்லப் பிராணிகளை அதிகம் விரும்பி அன்பு செலுத்தும் இவரின் இந்த வீரதீர செயல் இணையத்தில் பரவியதை அடுத்து, பலரும் பாராட்டி வருகின்றனர்.

Tags : #DOG #SAVE #WOMAN #LIFE #ANIMAL #LOVE #VIDEOVIRAL