'நிறைமாத இளம் கர்ப்பிணிப் பெண்'... 'மருத்துவமனைக்கு சென்றபோது'... 'கணவர் கண்முன்னே'... 'நடந்தேறிய கொடூரம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Feb 05, 2020 10:15 PM

பழனி அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில், நிறைமாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Pregnant Woman who died in front of her Husband in Accident

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள இரவிமங்கலத்தைச் சேர்ந்தவர் மகுடீஸ்வரன் (30). கூலித் தொழிலாளியாக வேலைப் பார்த்து வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள் (27). இந்த தம்பதிக்கு 4 வயதில் ஆண்குழந்தை உள்ளது. இந்நிலையில், கர்ப்பமடைந்த மாரியம்மாள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இதனால், பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக இருசக்கர வாகனத்தில் கணவருடன் சென்றுள்ளார்.

கரடிகூட்டம் என்ற பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வேகமாக வந்த கார் ஒன்று மகுடீஸ்வரனின் இருசக்கர வாகனத்தில் மோதியுள்ளது. இதில் மகுடீஸ்வரனும், மாரியம்மாளும் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு கீழே விழுந்தனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே நிறைமாத கர்ப்பிணியான மாரியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயத்துடன் மீட்கப்பட்ட மகுடீஸ்வரன் பழனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இன்னும் ஒரு சில நாட்களில் பிரசவமாகும் நிலைமையில் இருந்த நிறைமாத கர்ப்பிணிப் பெண் சிகிச்சைக்காக சென்றநிலையில், கணவர் கண்முன்னே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து பழனி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #ACCIDENT #PREGNANT #WOMAN